உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / டாஸ்மாக்கில் ரூ.2.21 லட்சம் மது திருடிய 3 பேர் கைது

டாஸ்மாக்கில் ரூ.2.21 லட்சம் மது திருடிய 3 பேர் கைது

திருக்கோஷ்டியூ சிவகங்கை மாவட்டம் திருப்புத்துார் ஒன்றியம் சோலுடையான்பட்டியில் டாஸ்மாக் கடை உள்ளது. இக்கடையில் செப்.20ல் பூட்டுக்களை உடைத்து ஷட்டரை திறந்து மதுபாட்டில்கள் திருடு போயின. திருக்கோஷ்டியூர் போலீசார் விசாரணையில் குறைந்த விலை குவார்ட்டர் மது பாட்டில்கள் ரூ.2.21 லட்சம் மதிப்பிலான 1584 பாட்டில்களை திருடி வாகனத்தில் எடுத்துச் சென்றது தெரியவந்தது. இன்ஸ்பெக்டர் சசிக்குமார், எஸ்.ஐ.குணசேகரன் உள்ளிட்ட போலீசார் திருட்டுக்கும்பலை தேடி வந்தனர். நேற்று முன்தினம் தேவரம்பூர் விலக்கு ரோட்டில் வாகன சோதனையின் போது பதிவு எண் இல்லாமல் வந்த ஆட்டோ நிற்காமல் சென்றதை போலீசார் விரட்டிப் பிடித்தனர். அதில் வந்த மதுரை பெரிய பூலாம்பட்டியை சேர்ந்த மாரிமுத்து என்ற மாசானம் 20, தஞ்சாவூர் திருவையாறு அம்மன்பேட்டை அபிலேஷ் 20, மற்றும் தளபதி 35 ஆகியோரை பிடித்து விசாரித்தனர். அதில் சோலுடையான்பட்டி டாஸ்மாக்கில் இந்த கும்பல் திருடியது தெரியவந்தது. மூவரையும் கைது ஆட்டோவையும், 80 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணையில், நமணசமுத்திரத்தில் ஆட்டோவை திருடியதும், திருடிய மதுபாட்டில்களை தஞ்சாவூரில் விற்றதும் தெரியவந்தது, கைதான தளபதி மீது 3 கொலை,4 கொலை முயற்சி, 17 திருட்டு, 4 ஆயுதங்களை கொண்டு மிரட்டியது உள்ளிட்ட 72 வழக்குகள் உள்ளது. மாசாணத்தின் மீது 11 வழக்குகள் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ