உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வாலிபர் கொன்று புதைப்பு நண்பர்கள் 4 பேர் சிக்கினர்

வாலிபர் கொன்று புதைப்பு நண்பர்கள் 4 பேர் சிக்கினர்

தேவகோட்டை: வாலிபரை கொலை செய்து புதைத்து தப்பிய நண்பர்கள் நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே அமராவதிபுதுாரை சேர்ந்தவர்கள் வெங்கடேஷ், 28, புஷ்பராஜ். நேற்று முன் தினம் இரவு, 9:00 மணிக்கு வெங்கடேஷ், புஷ்பராஜ் உட்பட நண்பர்கள் தேவகோட்டை அருகே தானாவயல் கண்மாயில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில், வெங்கடேஷை, அவர்கள் நண்பர்கள் கத்தியால் அறுத்து கொலை செய்து, உடலை கண்மாயில் புதைத்து தப்பினர். புஷ்பராஜும், கண்டனுாரை சேர்ந்த மனோஜும் ஆறாவயல் போலீசில் சரணடைந்தனர். வெங்கடேஷ் உடல், டி.எஸ்.பி., கவுதம், முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டது. ஏழு பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து, புஷ்பராஜ், மனோஜ், விக்னேஷ், சீனிவாசன் ஆகியோரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி