உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பா.ஜ., நிர்வாகி கொலை வழக்கு மேலும் 4 பேர் சுற்றிவளைப்பு

பா.ஜ., நிர்வாகி கொலை வழக்கு மேலும் 4 பேர் சுற்றிவளைப்பு

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், அரியக்குடி சுப்பிரமணியன் மகன் பழனியப்பன், 34; சிவில் இன்ஜினியர். பா.ஜ., நிர்வாகியான இவர், பொன்நகர் அருகே புதிதாக கட்டி வரும் கட்டடத்தை கடந்த வாரம் பார்வையிட வந்த போது, ஒரு கும்பல் ஆயுதங்களால் பழனியப்பனை வெட்டி கொலை செய்தது. இது தொடர்பாக நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். பழனியப்பன் கட்டடத்தில் வாடகைக்கு வசித்த சாந்தகுமார் உட்பட மேலும் நான்கு பேரை நேற்று போலீசார் கைது செய்தனர். போலீசார் கூறியதாவது: அரியக்குடியில் பழனியப்பனுக்கு சொந்தமான வாடகை கட்டடத்தில் அதே பகுதியை சேர்ந்த பைனான்சியர் சாந்தகுமார், 42, வாடகைக்கு இருந்துள்ளார். கடையை காலி செய்ய சொல்லி சாந்தகுமாரிடம், பழனியப்பன் பலமுறை தெரிவித்துள்ளார். சாந்தகுமார் கடையை காலி செய்ய மறுத்துவிட்டார். இதனால் விரோதம் ஏற்பட்டுள்ளது. பழனியப்பன் தன்னிடம், 10 லட்சம் ரூபாய் வாங்கியதாக, சாந்தகுமார் போலி பத்திரத்தை வைத்துக்கொண்டு மிரட்டி உள்ளார். இது சம்பந்தமாக பழனியப்பன் காரைக்குடி போலீசில் புகார் அளித்தார். விசாரணையில், அந்த பத்திரம் போலி என்று தெரிய வந்ததால் போலீசார் சாந்தகுமாரை கைது செய்தனர். ஆத்திரத்தில் இருந்த சாந்தகுமார், தன் அக்கா மகனான பிரபஞ்சன் என்பவரிடம் பழனியப்பனை பழிவாங்க வேண்டுமென தெரிவித்துள்ளார். பிரபஞ்சன் கூலிப்படை தலைவனான குட்டி செல்வத்திடம் தெரிவித்துள்ளார். ஐந்து பேர் கொண்ட கூலிப்படையினர் பழனியப்பனை கொலை செய்துள்ளது. இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒருவர் தலைமறைவாக உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ