உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கை ஆட்டோ டிரைவர் கொலையில் 4 பேர் சிக்கினர்

சிவகங்கை ஆட்டோ டிரைவர் கொலையில் 4 பேர் சிக்கினர்

சிவகங்கை:சிவகங்கையில் தீபாவளியன்று நடந்த ஆட்டோ டிரைவர் மணிகண்டன் 40, மற்றும் களத்துார் பெண் லட்சுமி 60, கொலையில் தொடர்புடையவர்களை தனிப்படையினர் தேடி வருகின்றனர். இதற்கிடையில் டிரைவர் கொலையில் தொடர்புடையதாக கருதப்படும் 4 பேர் போலீசாரிடம் சிக்கினர்.சிவகங்கை அருகேவுள்ள வாணியங்குடியைச் சேர்ந்த ராஜங்கம் மகன் மணிகண்டன் 40. ரவி மகன் அருண்குமார் 26, கணேசன் மகன் ஆதிராஜா 50. மூவரும் தீபாவளியன்று மாலை 5:00 மணிக்கு கீழவாணியங்குடி நாடக மேடை அருகே பேசிக் கொண்டிருந்தனர். அப்போது இரு டூவீலர்களில் சென்ற 6 பேர் 3 பேரையும் வெட்டி விட்டு தப்பினர். இதில் மணிகண்டன் இறந்தார்.இதே போல் சிவகங்கை அருகே களத்துாரைச் சேர்ந்த சிங்கம் மனைவி லட்சுமியை தீபாவளி அன்று இரவு 7:00 மணிக்கு ஒரு கும்பல் வீடு புகுந்து கழுத்தை அறுத்து கொலை செய்து தப்பினர்.இதுகுறித்து சிவகங்கை மாவட்ட போலீசார் விசாரிக்கின்றனர். இரு கொலையிலும் ஒரே கும்பல் ஈடுபட்டிருக்குமோ என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.எஸ்.பி., டோங்கரே பிரவீன் உமேஷ், டி.எஸ்.பி., அமல அட்வீன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படையினரிடம் ஆட்டோ டிரைவர் கொலையில் தொடர்புடைய 4 பேர் சிக்கினர். அவர்களிடம் விசாரித்ததில் இரு கொலையிலும் தொடர்புடைய முக்கியவர்கள் குறித்து தகவல் கிடைத்துள்ளது. அவர்களையும், லட்சுமி மகன் ஜெயபாண்டியை அலைபேசியில் மிரட்டல் விடுத்தவரையும் தனிப்படையினர் தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி