உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / 466 கிலோ குட்கா பறிமுதல்; 5 பேர் கைது

466 கிலோ குட்கா பறிமுதல்; 5 பேர் கைது

சிவகங்கை; காரைக்குடியில் தனிப்படை போலீசார் கடைகளில் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் காரைக்குடி சுப்பிரமணியன் 53, சிவக்குமார்43 ஆகியோர் கடையில் குட்கா பொருட்கள் விற்கப்படுவது உறுதிசெய்யப்பட்டது. அவர்களுக்கு குட்கா விற்பனை செய்த அறந்தாங்கியை சேர்ந்த வீரசேகர் 32 என்பவரை கைது செய்து அவர்களிடம் இருந்து 211 கிலோ குட்கா பொருட்கள் மற்றும் ஒரு காரை பறிமுதல் செய்தனர். அவர்களிடம் விசாரித்ததில் பெங்களூருவில் இருந்து வீரசேகருக்கு குட்கா பொட்டலங்களை காரில் கடத்தி வந்த இருவர் குறித்த தகவல் கிடைத்தது. அதன்பேரில் பெங்களூருவை சேர்ந்த முகேஷ் 39, ராஜூராம் 34 ஆகிய இருவரை கைது செய்து 256 கிலோ குட்கா பொட்டலங்கள் மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ