உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மறியலில் ஈடுபட்ட 561 பேர் கைது 

மறியலில் ஈடுபட்ட 561 பேர் கைது 

சிவகங்கை: மத்திய அரசை கண்டித்து சிவகங்கையில் மறியலில் ஈடுபட்ட ஏ.ஐ.டி.யு.சி.,யினர் 371 பேரை போலீசார் கைது செய்தனர். மத்திய அரசு, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்து, குறைந்த பட்ச சம்பளம் ரூ.26,000 வழங்கு, மின்சார திருத்த சட்டம், புதிய பென்ஷன் சட்டத்தை திரும்ப பெறு உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி, நேற்று சிவகங்கை அரண்மனைவாசலில் ஏ.ஐ.டி.யு.சி.,யினர் பஸ் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட செயலாளர் ராஜா தலைமை வகித்தார். சி.ஐ.டி.யு., துணை தலைவர் உமாநாத், எல்.பி.எப்., மண்டல தலைவர் முருகன், ஐ.என்.டி.யு.சி., மாவட்ட தலைவர் மாரிமுத்து, ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட தலைவர் காளைலிங்கம், துணை தலைவர் சகாயம், சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அரண்மனைவாசலில் மறியலில் ஈடுபட்ட 326 பெண்கள் உட்பட 371 பேரை போலீசார் கைது செய்தனர். *காரைக்குடி பழைய பஸ் ஸ்டாண்டிலிருந்து செகண்ட் பீட் வரை ஊர்வலமாக வந்த தொழிற்சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.ஏ.ஐ.டி.யு.சி., சார்பில் பி.எல் ராமச்சந்திரன் மணவழகன் மாரி ராமராஜ் கண்ணன் சி.ஐ.டி.யு., சார்பில் சேதுராமன் அழகர்சாமி, எல்.பி.எப்., சார்பில் திருநாவுக்கரசு கலையரசன் மற்றும் மாநிலச் செயலாளர் கண்ணகி, மீனாள், சேதுராமன், இந்திய கம்யூ., நகரச் செயலாளர் சிவாஜி மாவட்ட குழு உறுப்பினர் முத்து சரவணன் பாலசுப்ரமணியம் ஆரோக்கிய தேவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.போராட்டத்தில் ஈடுபட்ட 190 பேரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ