கானாடுகாத்தான் அருகே வேன் கவிழ்ந்து 6 பேர் காயம்
காரைக்குடி: கானாடுகாத்தான் அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்த விபத்தில் 6 பேர் காயமடைந்தனர். திருச்சி அருகே உள்ள லால்குடியைச் சேர்ந்த குணசேகரன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 16 பேர் ராமேஸ்வரத்திற்கு வேனில் சென்றனர். கானாடுகாத்தான் அருகே உள்ள நேமத்தான்பட்டியில் வேன் வந்த போது கட்டுப்பாட்டை இழந்து வேன் சாலையோரத்தில் கவிழ்ந்தது. இதில் வேனில் இருந்தவர்கள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதில், குணசேகரன், நந்தகுமார், கோகிலா, கீர்த்தி, திவ்யா, கார்த்தி ஆகிய 6 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். செட்டிநாடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.