மேலும் செய்திகள்
மாவட்டத்தில் தொடரும்
06-Aug-2025
சிவகங்கை; சிவகங்கை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் 7 வழிப்பறி 4 திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளது. இதில் தொடர்புடைய கொள்ளையர்களை போலீசார் எப்போது கைது செய்வார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக தொடர் வழிப்பறி சம்பவங்கள் நடந்த வண்ணம் உள்ளது. ஆக. 6 மதகுபட்டி அருகே பிரவலுாரில் வீட்டுக்குள் புகுந்து மூதாட்டியிடம் 3 அரை பவுன் சங்கிலி பறிக்கப்பட்டது. ஆக. 8 சோழபுரம் அருகே டூவீலரில் சென்ற மூவரை தாக்கி கத்தியை காட்டி மிரட்டி ஒரு கும்பல் பணம் பறித்தது. அன்று இரவே பெருமாள்பட்டியில் பிரவலுாரைச் சேர்ந்த வெங்கட்ராமனின் காரை வழிமறித்து ரூ.1 லட்சம் மற்றும் போனை ஒரு கும்பல் பறித்தது. ஆக.9 இரவு இளையான்குடி வாள்மேல் நடந்த அம்மன் கோவிலில் உண்டியல் பூட்டை உடைத்து ரூ.ஒரு லட்சம் திருடப்பட்டது. அன்றே காரைக்குடி டி.டி.நகர் 2 வது வீதியில் சென்ற மூதாட்டி வள்ளியம்மையின் 8 பவுன் சங்கிலி பறிக்கப்பட்டது. ஆக.16 மானாகிரியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடியுள்ளனர். அன்றே மதகுபட்டி அருகே சிலந்தகுடியில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை வெள்ளி பெருட்களை திருடியுள்ளனர். ஆக.17 கோவானுாரில் தாய் மற்றும் மகளிடம் கத்தியை காட்டி 10 பவுன் மதிப்பிலான தங்க செயின்களை வழிப்பறி செய்தனர். ஆக.23 மதகுபட்டி அருகே இளைஞரிடம் தங்க செயினை வழிப்பறி செய்துள்ளனர். ஆக.29 காளையார்கோவில் அருகே அழகாபுரியில் ஒரு வீட்டின் பூட்டை உடைத்து பித்தளை பொருட்கள் பணத்தை ஒரு கும்பல் திருடி சென்றுள்ளது. மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் 10க்கும் மேற்பட்ட திருட்டு சம்பவங்கள் நடந்து உள்ளது. இதில் தொடர்புடைய ஒருசிலரை போலீசார் கைது செய்தாலும் பெரும்பாலான சம்பவங்களில் தொடர்புடையவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை.
06-Aug-2025