வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஆளுக்கு கட்டணமாக 500 ரூவா வசூல் பண்ணா போதும். கல்லா கட்டிறலாம். எட்டாங்குளாஸ் படிச்சவன் டீ மாஸ்டர், புரோட்டா மாஸ்டர் வேலை பாத்து நல்லா சம்பாரிக்கிறான்.
மானாமதுரை: மானாமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காலியாக உள்ள ஒரே ஒரு அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு நேற்று நடந்த நேர்காணலில் 8ம் வகுப்பு கல்வித் தகுதிக்காண பணியிடத்திற்கு பி.இ.,எம்.பி.ஏ., பட்டதாரிகள் உள்ளிட்ட 851 பேர் பங்கேற்றனர். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவல உதவியாளர் பணியிடத்தை நிரப்ப கடந்த சில வாரங்களுக்கு முன்பு இணையதளத்தில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இதில் சென்னை, மதுரை, கோவை, நாகர்கோவில், திருநெல்வேலி, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பி.இ.,எம்.பி.ஏ., படித்த இளநிலை,மேல்நிலை பட்டதாரிகள் உள்ளிட்ட 851 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். நேற்று அவர்களுக்கான நேர்காணல் மானாமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. ஒரே ஒரு அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு 851 பேர் விண்ணப்பம் செய்திருந்ததால் நேற்று 400 பேருக்கு காலை முதல் மாலை வரை நடைபெற்றது. இன்று மீதமுள்ள 451 பேருக்கும் நேர்காணல் நடைபெற உள்ளது. நேர்காணலில் கலந்து கொள்வதற்காக விண்ணப்பதாரர்கள் தமிழகம் முழுவதிலும் வந்திருந்ததால் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.
ஆளுக்கு கட்டணமாக 500 ரூவா வசூல் பண்ணா போதும். கல்லா கட்டிறலாம். எட்டாங்குளாஸ் படிச்சவன் டீ மாஸ்டர், புரோட்டா மாஸ்டர் வேலை பாத்து நல்லா சம்பாரிக்கிறான்.