வடமாடு மஞ்சுவிரட்டு மாடு முட்டி 9 பேர் காயம்
சிவகங்கை: இடையமேலுார் அருகே கண்டாங்கிபட்டியில் தி.மு.க., சார்பில் வடமாடு மஞ்சுவிரட்டு நடந்தது.மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 15 காளைகளும், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 15 மாடுபிடி வீரர்கள் குழுவாக 135 வீரர்கள் பங்கேற்றனர்.காளையை 25 நிமிடத்திற்குள் 9 பேர் கொண்ட மாடுபிடி வீரர்கள் அடக்க வேண்டும். அடங்க மறுத்த காளைகளுக்கும் அடக்கிய வீரர்கள் குழுவிற்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. மாடு முட்டியதில் 4 பேர் காயமடைந்தனர்.*சாலுாரில் கோவில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடந்தது.சிவகங்கை, சோழபுரம், நாலுகோட்டை, இடையமேலுார் உள்ளிட்ட பகுதியில் இருந்து 150க்கும் மேற்பட்ட மாடுகள் பங்கேற்றன.100க்கும் மேற்பட்ட மாடுகள் கட்டு மாடுகளாக பொட்டலில் ஆங்காங்கே அவிழ்த்து விடப்பட்டது. 50 மாடுகள் தொழுவத்தில் அவிழ்க்கப்பட்டது. மாடு முட்டியதில் 5 பேர் காயம் அடைந்தனர்.