உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  சிவகங்கையில் 90.40 மி.மீ., மழை  வீட்டு சுவர் சரிந்தது 

 சிவகங்கையில் 90.40 மி.மீ., மழை  வீட்டு சுவர் சரிந்தது 

சிவகங்கை: சிவகங்கையில் பெய்த மழையால் மத்திய கூட்டுறவு வங்கி கட்டுமான பள்ளத்தில் மழை நீர் தேங்கி யதில் அருகில் உள்ள வீட்டு சுவர் சேதமானது. அருகேயுள்ள மின்டிரான்ஸ்பார்மர் அடிப்பகுதியிலும் அரிப்பு ஏற்பட்டு விபத்து அச்சம் நிலவுகிறது. சிவகங்கை மாவட்ட அளவில் நேற்றுமுன்தினம் மதியம் முதல் இரவு வரை தொடர்ந்து இடி, மின்னல், காற்று இன்றி மழை பெய்தது. மழையால் மாவட்டத்தில் 1 லட்சம் எக் டேரில் மானாவாரியாகவும், கிணற்று பாசனம் மூலம் நெல் நடவு செய்த விவ சாயிகள் பயிரை காப்பாற்றி விடலாம் என்ற நம்பிக்கையில் உள்ளனர். நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி மாவட்டத்திலேயே அதிக பட்சமாக சிவகங்கையில் 90.40 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. தேவகோட்டை - 73, திருப்பு வனம் - 68.40, காளையார்கோவில் - 67.40, காரைக்குடி 65, சிங்கம்புணரி - 46.40, மானாமதுரை - 44.20, திருப்புத்துார் - 44, இளையான்குடி 27 மி.மீ.,யும், சராசரியாக 58.42 மி.மீ., பதிவாகியுள்ளது. இதில் சிவகங்கை, திருப்புவனம், காரைக்குடி, தேவகோட்டை, காளையார்கோவில் ஆகிய தாலுகாக்களில் பலத்த மழை பெய்துள்ளதாக கணக் கிட்டுள்ளனர். சிவகங்கையில் நேற்று முன்தினம் பெய்த மழையால், காந்திவீதியில் மத்திய கூட்டுறவு வங்கி அலுவலக கட்டடம் கட்டு வதற்காக 10 அடி ஆழத்தில் தோண்டிய பள்ளத்தில் மழை நீர் தேங்கியதில், அருகில் உள்ள வங்கி ஓய்வு அதிகாரி சந்திர மவுலியின் வீட்டு சுவர் இடிந்து விழுந்தது. மேலும், கட்டுமான பணிக்கு அருகில் காந்தி வீதியிலுள்ள வீடுகள், வர்த்தக நிறுவனங்களுக்கு மின்சப்ளை செய்யும், டிரான்ஸ்பார்மரின் அடிப்பகுதியில் அரிப்பு ஏற்பட்டு பள்ளமாக இருப்பதால், மின் டிரான்ஸ்பார்மர் எப்போது விழுந்து விபத்தை ஏற்படுத்துமோ என்ற அச்சத்தில் மக்கள் தவிக்கின்றனர். கட்டுமான பள்ளத்தில் தேங்கிய மழை நீர் மற்றும் சுவர் இடிந்த பகுதியை சிவகங்கை கோட்டாட்சியர் ஜெபிகிரேசியா, தாசில்தார் விஜயகுமார் பார்வையிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ