பள்ளியில் மின்சாரம் பாய்ந்து 9ம் வகுப்பு மாணவர் பரிதாப பலி
காரைக்குடி:சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை அருகே அரசு பள்ளி மாணவர் மின்சாரம் பாய்ந்து பலியானார்.புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள பத்தரசன்கோட்டையைச் சேர்ந்தவர் கைலாசம் மகன் சக்தி சோமையா, 14. இவர் சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை அருகே உள்ள பொய்யாவயல் அரசு உயர்நிலைப் பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று பள்ளியில் இருந்தபோது, கணினி அறையில் மின்சாரம் அவர் மீது பாய்ந்தது. படுகாயமடைந்த மாணவரை, காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற நிலையில் உயிரிழந்தார். சாக்கோட்டை போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.