உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கல்வி உதவித் தொகை தருவதாக சிறுவனிடம் ரூ.58 ஆயிரம் மோசடி

கல்வி உதவித் தொகை தருவதாக சிறுவனிடம் ரூ.58 ஆயிரம் மோசடி

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் 17 வயது சிறுவனுக்கு கல்வி உதவித் தொகை தருவதாக கூறி ரூ.58 ஆயிரம் பெற்று ஏமாற்றியவர் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுவன் அலைபேசிக்கு நவ.,8ல் வாட்ஸ் ஆப் எண்ணில் இருந்து வீடியோ காலில் ஒருவர் பேசியுள்ளார். அவர் என்.எஸ்.பி., திட்டத்தில் கல்வி உதவித் தொகை தருவதாக கூறி சிறுவனை நம்ப வைத்துள்ளார். சிறுவன் அவர் கூறிய வங்கி கணக்கிற்கு இரண்டு தவணைகளாக ரூ. 58 ஆயிரத்து 998 அனுப்பியுள்ளார். பணத்தை பெற்ற அந்த நபர் கல்வி உதவிதொகை கொடுக்காமல் ஏமாற்றினார். சிவகங்கை சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை