நள்ளிரவில் கடைக்குள் புகுந்த கார்
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் கடைக்குள் புகுந்தது. மதுரை மாவட்டத்தை சேர்ந்த முகமது அலி ஜின்னா, அப்துல்லா இருவரும் புதுக்கோட்டையில் இருந்து சிங்கம்புணரிக்கு காரில் டிச. 24ஆம் தேதி வந்தனர். அப்துல்லா காரை ஓட்டியுள்ளார். அதிகாலை 12:00 மணிக்கு சிவபுரிபட்டி விலக்கு அருகே வந்தபோது ரோட்டில் கோவில் மாடுகள் படுத்திருந்த நிலையில், அதன் மீது மோதாமல் இருக்க அப்துல்லா காரை திருப்பியுள்ளார். கட்டுப்பாட்டை இழந்த கார் அருகே இருந்த கடைக்குள் புகுந்தது. இதில் கடையில் இருந்த பொருட்கள் சேதமடைந்தன. கடைக்குள் ஆட்கள் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. காரில் வந்தவர்கள் லேசான காயத்துடன் தப்பினர். சிங்கம்புணரி போலீசார் விசாரிக்கின்றனர்.