உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  குப்பையால் மூடப்படும் ஊருணி

 குப்பையால் மூடப்படும் ஊருணி

எஸ்.புதுார்: எஸ்.புதுார் ஊருணியில் மருத்துவமனை, வீடுகளில் சேரும் குப்பை கொட்டப்படுவதால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. எஸ்.புதுார் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி இடையே பழமையான புதுப்பள்ளம் ஊருணி உள்ளது. அப்பகுதியில் சேகரிக்கப்படும் குப்பையை இந்த ஊருணிக் கரையில் கொட்டி வருகின்றனர். ஊருணி பரப்பு சுருங்கி வருகிறது. மருத்துவமனையில் சேரும் குப்பைகளையும் ஊருணிக்கரையில் கொட்டுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. குப்பையை தொடர்ந்து கொட்டுவதால் ஊருணி குப்பையால் மூடும் அபாயம் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை