உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சேதமடைந்த மின்கம்பம் விபத்து அபாயம் தொடர்கிறது

சேதமடைந்த மின்கம்பம் விபத்து அபாயம் தொடர்கிறது

காரைக்குடி: சாக்கோட்டையில் சேதமடைந்து உடைந்து விடும் நிலையில் உள்ள மின்கம்பங்களால் விபத்து அபாயம் நிலவுகிறது. சாக்கோட்டை ஒன்றியத்தில் உள்ள 26 ஊராட்சிகளில் 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் உள்ள கிராமங்களில், பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட மின் கம்பங்கள் தற்போது வரை பயன்பாட்டில் உள்ளன. இந்த மின்கம்பங்களில் பல முற்றிலும் சேதம் அடைந்து உடைந்து விழும் நிலையில் உள்ளது.வயல்களில் சாய்ந்து விழும் நிலையிலும் தாழ்வாக செல்லும் மீன் கம்பிகளாலும் விவசாயிகளுக்கு அபாயம் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.சாக்கோட்டை வட்டாரத்தில் சேதமடைந்த மின் கம்பங்களை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ