உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் பேச்சு போட்டி ஆக.21, 22 ல் நடக்கிறது

பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் பேச்சு போட்டி ஆக.21, 22 ல் நடக்கிறது

சிவகங்கை : சிவகங்கை மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலை பள்ளி கல்வி கருத்தரங்கு கூடத்தில், தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் ஆக.,21, 22 ல் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான பேச்சு போட்டிகள் நடைபெற உள்ளது. இதில், மாவட்ட அளவில் அனைத்து பள்ளிகளிலும் 6 முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம். ஆக., 21 அன்று பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான பேச்சு போட்டி நடைபெறும். கல்லுாரி மாணவர்களுக்கு ஆக. 22 அன்று நடைபெறும். பள்ளி மாணவர்களுக்கு அண்ணாதுரையின் மேடை தமிழ், எழுத்தாளராக அண்ணாதுரை, சமூக நீதிக்கான அண்ணா துரையின் கொள்கை ஆகிய தலைப்புகளில் நடத்தப்படும். கல்லுாரி மாணவர்களுக்கென சட்டசபையில் அண்ணாதுரை, அவரது சமுதாய சிந்தனை, தமிழும், அண்ணாதுரையும் ஆகிய தலைப்புகளில் நடத்தப்படும். ஈ.வெ.ரா., வின் பகுத்தறிவு சிந்தனை, சுயமரியாதை இயக்கம், ஈ.வெ.ரா.,வும் பெண் விடுதலையும் ஆகிய தலைப்பில் பள்ளி மாணவர்களுக்கும், ஈ.வெ.ரா.,வும் மூட நம்பிக்கை ஒழிப்பும், அவரது எழுத்து பணி, அவரது சமூக சீர்திருத்தங்கள் ஆகிய தலைப்புகளில் கல்லுாரி மாணவர்களுக்கு பேச்சு போட்டி நடைபெறும். இப்போட்டியில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசு ரூ.5000, இரண்டாம் பரிசு ரூ.3000, மூன்றாம் பரிசு ரூ.2000 வீதம் வழங்கப்படும். அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பரிசு தொகை ரூ.2000 வீதம் 2 பேருக்கு வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு தமிழ்வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் அலுவலகம், கலெக்டர் அலுவலக வளாகம், சிவகங்கையில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என கலெக்டர் பொற்கொடி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை