மேலும் செய்திகள்
சிவகங்கை: கிறிஸ்துமஸ் விழா
8 hour(s) ago
விடுதி அருகே எரிந்த வேன்
8 hour(s) ago
தினமலர் பட்டம் வினாடி வினா போட்டி
8 hour(s) ago
பழநி பாதயாத்திரையில் வெளிநாடு நகரத்தார்
8 hour(s) ago
சிவகங்கையில் மறியல்
8 hour(s) ago
காரைக்குடி : காரைக்குடியில் இருந்து திருச்சி சென்ற அரசு பஸ்சின் ரேடியேட்டர் பழுதானதால் நடுரோட்டில் பஸ் நின்றதோடு பயணிகள் சிரமப்பட்டனர். திருச்சியிலிருந்து காரைக்குடி வழியாக தேவகோட்டை திருவாடானைக்கு அரசு பஸ் இயக்கப்படுகிறது. நேற்று மாலை திருவாடானையில் இருந்து தேவகோட்டை வழியாக காரைக்குடிக்கு அரசு பஸ் பயணிகளுடன் வந்தது.காரைக்குடி வ.உ.சி., ரோடு அருகே பஸ் வந்த போது ரேடியேட்டர் பழுதானது. ரேடியேட்டரிலிருந்து தண்ணீர் வடிந்தபடி பஸ் ரோட்டில் நின்றது. பயணிகள் கீழே இறக்கி விடப்பட்டனர். நீண்ட நேரத்திற்கு பிறகு மாற்று பஸ்சில் பயணிகள்அனுப்பி வைக்கப்பட்டனர். சாலையின் நடுவே பஸ் நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து பிரச்னையும் ஏற்பட்டது. அதிக துாரம் சென்றுவரும் அரசு பஸ்களை முறையாக பராமரித்து வைக்காததே, பஸ்கள் ரோட்டில் நிற்பதற்கு காரணம் என பயணிகள் புலம்பி சென்றனர். மேலும் பஸ்களை பராமரிக்க, டிப்போவில் போதிய ஆட்கள் இல்லாததும் இப்பிரச்னைக்கு முக்கிய காரணம் என தெரிய வந்துள்ளது.
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago