உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / காத்திருப்பு போராட்டம்

காத்திருப்பு போராட்டம்

காரைக்குடி : காரைக்குடியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகம் முன்பு தொமுச., ஊழியர்கள், சந்தா தொகை பிடித்தம் செய்யாத நிர்வாகத்தை கண்டித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.தொ.மு.ச., மத்திய சங்க பொதுச் செயலாளர் பச்சமால் கூறியதாவது:காரைக்குடி மண்டலம்தொமுச., தொழிற்சங்கத்திற்கு சந்தா தொகை பிடிக்க தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அகில இந்திய தொமுச., பொதுச் செயலாளர், தொமுச பேரவை போக்குவரத்து பிரிவு பொதுச் செயலாளர் நிர்வாகத்திடம் எடுத்துக் கூறியும் காரைக்குடி மண்டலம் தொமுச., தொழிற்சங்கத்திற்கு சந்தா தொகை பிடிக்காமல் மவுனம் சாதித்து வருகின்றனர். இதனை கண்டித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்