உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கச்சாத்தநல்லுாரில் 20 நாளில் வயலில் விழுந்த மின் கம்பம் அசம்பாவிதம் தவிர்ப்பு

கச்சாத்தநல்லுாரில் 20 நாளில் வயலில் விழுந்த மின் கம்பம் அசம்பாவிதம் தவிர்ப்பு

இளையான்குடி, அக்.30- இளையான்குடி அருகே உள்ள கச்சாத்தநல்லுாரில் 400 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் நெல் விவசாயம் செய்யப்படுகிறது.நடுக்குடியிருப்பு பகுதியில் விவசாய நிலங்களில் உள்ள பம்ப் செட்டுகளுக்காக வயல்களின் ஓரங்களிலும், நடுவிலும் மின் கம்பம் அமைக்கப்பட்டு மின்விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த மின்கம்பங்கள் மிகவும் சேதமடைந்து ஆங்காங்கே சாய்ந்து கீழே விழும் நிலையில் இருப்பதால் மாற்ற வேண்டுமென்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இப்பகுதியில் இருந்த மின்கம்பம் வயலில் சாய்ந்து கீழே விழுந்தது. மின்வாரியத்தினர் அந்த மின் கம்பத்துக்கு பதிலாக வேறொரு மின்கம்பத்தை 20 நாட்களுக்கு முன்பு நட்டனர். நேற்று முன் தினம் இரவு அந்த மின் கம்பம் மீண்டும் வயலில் சாய்ந்தது. இரவில் சாய்ந்ததால் வயலில் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !