மேலும் செய்திகள்
பெட்ரோல் குடித்து ஒருவர் பலி
17 hour(s) ago
பயிற்சி முகாம்
17 hour(s) ago
சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை
17 hour(s) ago
தேவகோட்டையில் அம்பு எய்தல் வைபவம்
17 hour(s) ago
சிலை பிரதிஷ்டை
17 hour(s) ago
திருப்புவனம்: திருப்புவனம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளில் எச்சரிக்கை அடையாளம் ஏதும் இல்லாததால் தினசரி பலரும் அதில் தடுமாறி விழுந்து காயமடைந்து வருகின்றனர்.திருப்புவனத்தைச் சுற்றிலும் உள்ள 173 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தினசரி தங்களது தேவைகளுக்காக திருப்புவனம், மதுரை சென்று வருகின்றனர். போதிய பஸ்கள் இல்லாததால் பலரும் டூவீலர்களை நம்பியே உள்ளனர். கிராமங்களில் பல இடங்களில் விபத்துகளை தடுக்க வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர குடிநீர் குழாய் பதிப்பதற்காகவும் பல இடங்களில் நெடுஞ்சாலைத்துறை ரோடு சேதப்படுத்தப்பட்டு குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. அதனை சரி செய்யாமல் பள்ளங்களாக உள்ளன. வேகத்தடை பலவும் இருப்பதே தெரிவதில்லை, பகலில் கூட வேகத்தடை இருப்பது தெரியாத நிலையில் இரவில் பலரும் வேகத்தடைகளால் தடுமாறி விழுந்து காயமடைந்து வருகின்றனர். வேகத்தடைகள் மீது வெண்மை நிற கோடு இல்லாததால் இரவு நேரங்களில் பலரும் விழுந்து காயமடைந்து வருகின்றனர்.
17 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago