உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / முத்தனேந்தலில் பராமரிப்பு இல்லாத சாக்கடை கால்வாயால் விபத்து

முத்தனேந்தலில் பராமரிப்பு இல்லாத சாக்கடை கால்வாயால் விபத்து

மானாமதுரை: மானாமதுரை அருகே முத்தனேந்தலில் பரா மரிப்பு இல்லாத சர்வீஸ் ரோடால் தினந்தோறும் விபத்து ஏற்படுகிறது. மதுரையிலிருந்து பரமக்குடி வரை நான்கு வழிச்சாலையாகவும், பரமக்குடியில் இருந்து ராமநாதபுரம் வரை இரு வழிச்சாலையாக 7 வருடங்களுக்கு முன் மாற்றப்பட்டு போக்கு வரத்து நடைபெற்று வருகிறது. மானாமதுரை அருகே உள்ள முத்தனேந்தலில் நான்கு வழிச்சாலை யின் ரோட்டின் இரு புறங்களிலும் சர்வீஸ் ரோடு அமைக்கப்பட்டு இன்னும் முழுமை பெறாமல் உள்ளது. நான்கு வழிச்சாலை யிலேயே பஸ்களில் பயணி களை ஏற்றி,இறக்கி செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு பலர் பலியாகி வருகின்றனர். மேலும் சர்வீஸ் ரோட்டின் ஓரங்களில் மழை நீர் மற்றும் கழிவு நீர் செல்லும் வாய்க்கால் சரியாக மூடப்படாமல் ஆங்காங்கே பள்ளமாக இருப்பதால் இவ்வழியாக செல்லும் மக்கள் பள்ளத்தில் விழுந்து அடிக்கடி காயமடைகின்றனர். நான்கு வழிச்சாலை ஆணைய அதிகாரிகள் முத்தனேந்தல் பகுதியில் சர்வீஸ் ரோட்டை பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், மராமத்து செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை