உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மான்கள் குறுக்கிடும் சாலைகளில் எச்சரிக்கை இல்லாததால் விபத்து

மான்கள் குறுக்கிடும் சாலைகளில் எச்சரிக்கை இல்லாததால் விபத்து

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே வனப்பகுதி சாலைகளில் மான்கள் குறுக்கே தாவும் பகுதிகளில் எச்சரிக்கை பலகை இல்லாததால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். இத்தாலுகாவில் ஓசாரிபட்டி, சதுர்வேதமங்கலம், முறையூர், ஏரியூர் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் ஏராளமான புள்ளிமான்கள் திரிகின்றன. இவை தண்ணீர், இரை தேடி கிராமப் பகுதிகளுக்குள் வருவது வழக்கம். அப்படி வரும்போது நாய்கள் விரட்டும் பட்சத்தில் சாலையின் குறுக்கே தாவி ஓடும். டூவீலர்களில் வரும் வாகன ஓட்டிகளின் தலை உயரத்திற்கு தாவுகின்றன. இதனால் பலர் கீழே விழுந்து காயமடைந்துள்ளனர். மான்கள் குறிப்பிட்ட பகுதிகளில் அடிக்கடி சாலையை கடக்கும் நிலையில், அப்பகுதியில் எச்சரிக்கை பலகை எதுவும் இல்லை. 5 ஆண்டுகளுக்கு முன்பு வனத்துறை சார்பில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டிருந்தது. தற்போது அவை இல்லை. டூவீலரில் செல்பவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். நிரந்தர தீர்வாக மான்கள் உலாவும், குறுக்கிடும் பகுதிகளில் வனத்துறை உரிய எச்சரிக்கை பலகைகளை அமைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ