உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஆதிதிராவிடர் நல கண்காணிப்பு குழு கூட்டம்

ஆதிதிராவிடர் நல கண்காணிப்பு குழு கூட்டம்

சிவகங்கை: சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் ஆதிதிராவிடர் நல, விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடந்தது. கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி, மாவட்ட எஸ்.பி., ஆஷிஷ் ராவத் முன்னிலை வகித்தனர்.ஆதிதிராவிடர் நல அலுவலர் ஆனந்தி வரவேற்றார். கூடுதல் எஸ்.பி., பிரான்சிஸ், டி.எஸ்.பி.,க்கள் மானாமதுரை நிரேஷ், தேவகோட்டை கவுதம், ஊராட்சிகள் உதவி இயக்குனர் கேசவதாசன், தாட்கோ மேலாளர் செலினா, திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கை மாறன், ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர்கள் பூமிநாதன், சேது, செல்வகுமார், பொன்னுச்சாமி, ஆறுமுகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.கூட்டத்தில், அயோத்திதாசர் நிதி உதவி திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு மாவட்டத்திற்கு ரூ.2.25 கோடியை அரசு ஒதுக்குகிறது. அந்த நிதி மூலம் டி.என்.பி.எஸ்.சி., மற்றும் யு.பி.எஸ்.சி., போட்டி தேர்வுக்கு தயாராகும் ஆதிதிராவிட பட்டதாரிகளுக்கு தனியாக பயிற்சி மைய கட்டடம் கட்டித்தர வேண்டும். சிவகங்கை அரசு மருத்துவ கல்லுாரிக்குள் பெண் டாக்டர் மீது தாக்குதல் நடத்தியது போன்று தொடர் சம்பவம் நடக்காமல் இருக்க, நோயாளிகளின் உதவியாளர்களுக்கு அடையாள அட்டை கட்டாயமாக்க வேண்டும் என நலக்குழு உறுப்பினர்கள் கலெக்டரிடம் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை