உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருப்புவனத்தில் ஆதியோகி ரதம்

திருப்புவனத்தில் ஆதியோகி ரதம்

திருப்புவனம்: மஹா சிவராத்திரியை முன்னிட்டு திருப்புவனம் வந்த கோவை ஆதி யோகி சிவனின் ரதத்தை பக்தர்கள் பலரும் மலர் தூவி வரவேற்றனர்.கோவை ஈஷா யோகா மையத்தில் மிகப்பெரிய சிவன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு யோகா உள்ளிட்டவைகள் நடந்து வருகின்றன. வருடம்தோறும் சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் உள்ளிட்டவைகள் நடைபெறும். இந்தாண்டு மஹா சிவராத்திரி மார்ச் 8ம் தேதி நடைபெற உள்ளதையடுத்து ஆதியோகி சிவன் ரதம் ராமேஸ்வரத்தில் இருந்து கிளம்பி திருப்புவனம் வழியாக கோவை செல்கிறது. நேற்று காலை 9:00 மணிக்கு திருப்புவனம் வந்த ஆதியோகி சிவன் ரதத்திற்கு பக்தர்கள் மலர் தூவி வரவேற்றனர். திருப்புவனம் நகரின் வழியாக சென்ற ரதத்தில் உள்ள ஆதியோகி சிவனை பலரும் வழிபட்டனர். பின் மதுரை புறப்பட்டு சென்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி