உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / இளையான்குடியில் பன்றிகளை கட்டுப்படுத்த ஆலோசனை

இளையான்குடியில் பன்றிகளை கட்டுப்படுத்த ஆலோசனை

இளையான்குடி: இளையான்குடி தாலுகா அலுவலகத்தில் விளை நிலங்களை சேதப்படுத்தும் பன்றிகளை கட்டுப்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.தாசில்தார் முருகன் தலைமையில் நடந்த கூட்டத்தில் வேளாண் உதவி இயக்குனர் தங்கப்பாண்டியன், சிவகங்கை வன பாதுகாப்பாளர் கென்னடியான், விவசாயிகள் குருசாமி, அய்யாச்சாமி, மலைச்சாமி பங்கேற்றனர்.கூட்டத்தில் சென்னை வண்டலுார் வன ஆராய்ச்சி கழகத்தின் ஆய்வு முடிவுப்படி விவசாய நிலங்களை சேதப்படுத்துவது காட்டுப்பன்றிகள் இல்லை என தெரியவந்துள்ளது என அறிவிக்கப்பட்டது.விவசாயிகள் தரப்பில் கூறுகையில்: கண்மாய் மற்றும் தனியார் நிலங்களில் உள்ள கருவேல மர காடுகள் தான் பன்றிகளுக்கு இருப்பிடமாக உள்ளது, எனவே அவற்றை முற்றிலும் அகற்ற வேண்டும் என தெரிவித்தனர்.பொதுப்பணித் துறையிடம் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஏற்பாடுகளை மண்டல துணை தாசில்தார்கள் முத்துராமலிங்கம், உமா மீனாட்சி ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை