வாடத்திக்கண்மாய் ஆக்கிரமிப்பு
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே கண்மாய் ஆக்கிரமிப்பை அகற்ற விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். இவ்வொன்றியத்தில் சதுர்வேதமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட வாடத்திக் கண்மாய் 20 ஏக்கர் பரப்பு கொண்டது. இக்கண்மாயை நம்பி 150 ஏக்கருக்கும் மேற்பட்ட பாசன நிலங்கள் உள்ளன. இந்நிலையில் இக்கண்மாய் பகுதிகளை சிலர் ஆக்கிரமித்துள்ள நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.ஆனால் கண்மாயை அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் காலம் தாழ்த்தி வருவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றுவதுடன், மேலும் ஆக்கிரமிப்பு நடைபெறாமல் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.