மேலும் செய்திகள்
முனைவென்றியில் நெற்பயிரை அழிக்கும் பன்றிகள்
09-Nov-2024
இளையான்குடி : இளையான்குடி சுற்று வட்டார கிராம பகுதிகளில் நெற்பயிர்களை இலை சுருட்டு புழு தாக்குவதாக தினமலர் இதழில் செய்தி வெளியானதையடுத்து வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து அதனை கட்டுப்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு விளக்கினர்.இளையான்குடி,சாலைக்கிராமம், முனைவென்றி,சூராணம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் குண்டு மிளகாய்க்கு அடுத்தபடியாக நெல் விவசாயம் நடக்கிறது. கல்வெளிப்பொட்டல்,தெற்கு கீரனுார், அரியாண்டிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 50 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் விவசாயிகள் நேரடி விதைப்பு மூலம் நெல் விவசாயம் செய்துள்ளனர்.தற்போது நெற்பயிரில் இலை சுருட்டு புழு தாக்கி வருவதால் விவசாயிகள் பரிதவிப்புக்குள்ளாகி வருவதாகவும், இதனால் மகசூல் பாதிக்கப்பட்டு நஷ்டம் ஏற்படும் சூழ்நிலை இருப்பதாக நேற்று முன்தினம் தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.இதனைத் தொடர்ந்து நேற்று காலை கல்வெளிபொட்டல் கிராம வயல்களுக்கு சென்ற வேளாண்மை இணை இயக்குனர் சுந்தர மகாலிங்கம், உதவி இயக்குனர் தங்கபாண்டியன், துணை வேளாண்மை அலுவலர் நடேசகுமார், உதவி வேளாண்மை அலுவலர் சோபனா ஆகியோர் ஆய்வு செய்து இலை சுருட்டு புழுக்களை கட்டுப்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர்.
09-Nov-2024