உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / உழவரை தேடி வேளாண் திட்டம்

உழவரை தேடி வேளாண் திட்டம்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் இன்று உழவரை தேடி வேளாண் திட்ட துவக்க விழா நடைபெற உள்ளதாககலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார். அவர் கூறியதாவது: இம்மாவட்டத்தில் 12 ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் உள்ள 521 வருவாய் கிராமங்களில் இத்திட்டத்தை செயல்படுத்த உதவி இயக்குனர் தலைமையில் குழு அமைக்கப்படும். இக்குழு மாதம் இரு முறை வருவாய் கிராமங்களில் முகாமிட்டு விவசாயிகள் நலம் சார்ந்த திட்டங்களை எடுத்து கூறுவார்கள். விதை, உயிர் உரம், நுண்ணுாட்டக்கலவை, உயிரியல் கட்டுப்பாடு, காரணிகள் போன்ற இடு பொருட்கள் மானிய விலையில் வழங்க திட்டமிடப்படும். நீர், உர, களை மேலாண்மை, பூச்சிகள் மற்றும் நோய்கள் தாக்குதலிருந்து பயிர்களை பாதுகாப்பு பற்றியும் அதற்கான பரிந்துரை எடுத்து கூறப்படும். நுண்ணீர் பாசன திட்டம் செயல்படுத்துவதற்கான பயனாளிகள் கண்டறிதல், பயிர் காப்பீடு செய்வதால் ஏற்படும் நன்மைகளை எடுத்து கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மேலும் வேளாண் விற்பனை மற்றும் வணிகம், பொறியியல், தோட்டக்கலை, கால்நடை பராமரிப்பு, மீன்வளத்துறைகள் குறித்து விவசாயிகளிடம் எடுத்து கூறப்படும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ