உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அமைச்சர் பொன்முடியை கண்டித்து சிவகங்கையில் அ.தி.மு.க.,ஆர்ப்பாட்டம்

அமைச்சர் பொன்முடியை கண்டித்து சிவகங்கையில் அ.தி.மு.க.,ஆர்ப்பாட்டம்

சிவகங்கை : பெண்களை இழிவு படுத்தி பேசிய அமைச்சர் பொன்முடியை கண்டித்து சிவகங்கை அரண்மனை வாசலில் அ.தி.மு.க., மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.மகளிரணி மாவட்ட செயலாளர் ஜாக்குலின் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் அமைப்பு செயலாளர் பாஸ்கரன், நகர செயலாளர் ராஜா, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் கற்பகம் இளங்கோ, உமாதேவன், நாகராஜன் முன்னிலை வகித்தனர். ஜெ பேரவை மாநில துணை செயலாளர் தமிழ்செல்வன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல தலைவர் கோபி, ஜெ பேரவை மாவட்ட செயலாளர் இளங்கோவன், ஒன்றிய செயலாளர் செல்வமணி, கருணாகரன், சேவியர், பழனிசாமி, சிவாஜி, அருள் ஸ்டீபன், மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி துணைத்தலைவர் வக்கீல் ராஜாகலந்து கொண்டனர். மகளிரணி நிர்வாகிகள் சரஸ்வதி, ராஜேஸ்வரி, சித்ராதேவி, திவ்யா பிரபு, சரண்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ