உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க ஊழியர்களுக்கு சம்பளம் இல்லை

எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க ஊழியர்களுக்கு சம்பளம் இல்லை

தேவகோட்டை: தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் கீழ் ஆரம்ப சுகாதார நிலையங்கள், தாலுகா அரசு மருத்துவமனை, மாவட்ட தலைமை மருத்துவமனை, மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நம்பிக்கை மையங்கள்எனும் அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு கீழ் லேப் டெக்னீசியன், ஆலோசகர்கள், மருந்தாளுநர், செவிலியர்கள், விபரக்குறிப்பு மேலாளர்கள் பணியாற்றுகின்றனர். இதில் மாவட்ட முழுவதும் காலியாக உள்ள பணியிடங்கள் போக 60 பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். வழக்கமாக மற்ற அலுவலர்களுக்கு வழங்குவது போல் இவர்களுக்கும் மாத துவக்கத்தில் சம்பளம் வழங்கப்படும். நேற்று டிச.16ம் தேதி ஆன நிலையிலும் நவம்பர் சம்பளம் இதுவரை இந்த அலுவலர்களுக்கு வழங்கவில்லை.தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு அனைத்து ஊழியர் நல சங்க மாவட்ட தலைவர் முருகன் கூறுகையில், ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றுபவர்களுக்கும் அதே நிலையில் மருத்துவமனைகளில் பணிபுரியும் அலுவலர்களுக்கும் சம்பள விகிதத்தில் முரண்பாடு உள்ளது. இந்த நிலையில் நவம்பர் சம்பளமும். வழங்கவில்லை. சிவகங்கை மாவட்டம் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதுமே இதே நிலை தான் உள்ளது. இது பற்றி விசாரித்த போது தெளிவான, உறுதியான எந்த தகவலும் கிடைக்கவில்லை என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை