உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / விமானப்படைக்கு வீரர்கள் தேர்வு 

விமானப்படைக்கு வீரர்கள் தேர்வு 

சிவகங்கை: இந்திய விமானப்படையில் அக்னிபாத் திட்டத்தில் வீரர்கள் தேர்வு செப்., 2 மற்றும் 5ல் நடைபெறும் என கலெக்டர் பொற்கொடி தெரிவித்தார். அவர் கூறியதாவது: இந்திய விமான படையில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் வீரர்கள் நேரடி ஆட்சேர்ப்புக்கான தேர்வு சென்னை, தாம்பரத்தில் உள்ள விமான படைதளத்தில் செப்., 2 ஆண்களுக்கும், செப்., 5 ல் பெண்களுக்கும் நடைபெறும். இதற்கு விண்ணப்பிக்க பிளஸ் 2, அதற்கு ஈடான கல்வியில் 50 சதவீத மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கில பாடப்பிரிவிலும் 50 சதவீத மதிப்பெண்ணுடன் தேர்ச்சி அவசியம். இத்தேர்வில் பங்கேற்க 2026 ஜன., 1 அன்று 17.5 வயது முடிந்தும், 21 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். மேலும் விபரத்திற்கு ''www.agnipathvayu.cdac.in'' என்ற இணையதள முகவரியிலோ அல்லது சிவகங்கை வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் மூலம் விபரங்களை பெறலாம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை