உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அஜித்குமார் கொலை வழக்கு; சி.சி.டி.வி., காட்சிகள் ஆய்வு

அஜித்குமார் கொலை வழக்கு; சி.சி.டி.வி., காட்சிகள் ஆய்வு

திருப்புவனம்; அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த வந்த சி.பி.ஐ., அதிகாரிகள், வீடு பூட்டியிருந்ததால் ஏமாற்றம் அடைந்தனர். ஜூன் 28ல் போலீசார் விசாரணையின் போது உயிரிழந்த வாலிபர் அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக சி.பி.ஐ., அதிகாரிகள் ஜூலை 12 முதல் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று இரண்டு கார்களில் மடப்புரத்திற்கு சி.பி.ஐ., அதிகாரிகள் வந்தனர். நவீன்குமார் வீட்டில் விசாரணை நடத்திய பின் அதிகாரிகள் அஜித்குமாரின் தாய் மாலதி, சகோதரர் நவீன்குமார் ஆகியோரை மதுரைக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்வதாக கூறி சென்றனர். மற்றொரு காரில் வந்த அதிகாரிகள் திருப்புவனம் போலீஸ் குடியிருப்பில் உள்ள கைது செய்யப்பட்ட கண்ணன் வீட்டிற்கு விசாரணைக்கு சென்றனர். வீடு பூட்டியிருந்ததால் திரும்பினர். மாலை ஆறரை மணியளவில் சி.பி.ஐ.,அதிகாரிகள் மீண்டும் மடப்புரம் வந்து உதவி ஆணையர் அலுவலகத்தில் விசாரணை நடத்தினர். ஜூன் 27 அன்று பதிவான சி.சி.டி.வி., காட்சிகள் குறித்து விசாரித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை