மானாமதுரை அரசு பள்ளிக்கு மாற்று இடம்: அரசுக்கு பரிந்துரை
மானாமதுரை: மானாமதுரையில் நெருக்கடியில் செயல்பட்டு வரும் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி சிப்காட் தாலுகா அலுவலகம் எதிரே உள்ள இடத்தில் இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மானாமதுரை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள், சீருடைகள் உள்ளிட்ட கல்வி உபகரணப் பொருட்களை எம்.எல்.ஏ., தமிழரசி வழங்கினார்.மானாமதுரை சிப்காட் தாலுகா அலுவலகம் எதிரே அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி கட்ட 3 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்ட நிலையில் மாவட்ட நிர்வாகம் மூலம் தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.நிதி ஒதுக்கீடு வந்தவுடன் பள்ளி கட்டடங்கள் கட்டும் பணி துவங்கும் என நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ., தமிழரசி தெரிவித்தார். நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி, துணைத்தலைவர் பாலசுந்தரம் மற்றும் கல்வித் துறை அதிகாரிகள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.