உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அடிப்படை வசதி இல்லாத  அங்கன்வாடி கட்டடம்

அடிப்படை வசதி இல்லாத  அங்கன்வாடி கட்டடம்

சிவகங்கை: சிவகங்கை அருகே பி.வேலாங்குளம் கிராமத்தில் அடிப்படை வசதி இல்லாத அங்கன்வாடி கட்டடத்தில் குழந்தைகள் சிரமப்படுவதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.படமாத்துார் அருகே உள்ளது பி.வேலாங்குளம் கிராமம். இங்கு 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள அங்கன்வாடி மையத்தில் முன்பு 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வந்தனர். தற்போது 10 குழந்தைகள் தான் படிக்கின்றனர். அங்கன்வாடி கட்டடம் முழுவதும் சேதம் அடைந்துள்ளது. கட்டடத்தை சுற்றி முட்புதர் காணப்படுகிறது. அங்கன்வாடியில் குடிநீர் வசதி, கழிப்பறை வசதி இல்லை. குடிப்பதற்கும், சமைப்பதற்கும் ஒரு கிலோமீட்டர் துாரத்தில் இருந்து தலைச் சுமையாக பணியாளர் தண்ணீர் கொண்டு வர வேண்டும்.எந்தவித வசதியும் இல்லாததால் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை அங்கன்வாடிக்கு அனுப்ப தயங்குகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி