உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருக்கோளக்குடியில் ஆனித் தேரோட்டம்

திருக்கோளக்குடியில் ஆனித் தேரோட்டம்

திருப்புத்துார்: திருப்புத்துார் ஒன்றியம் திருக்கோளக்குடி திருக்கோளநாதர் கோயில் ஆனிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு நடந்த தேரோட்டத்தில் பலர் பங்கேற்றனர்.குன்றக்குடி தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் ஆனித் திருவிழா ஜூன் 29ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து மலைக்கோயிலிலிருந்து ஐம்பெரும் சுவாமிகளும் மலையடிவாரக் கோயிலில் எழுந்தருளினர். தினசரி காலையில் சுவாமிகளுக்கு அபிேஷக, ஆராதனை நடந்து பக்தர்கள் தரிசித்தனர். இரவில் சுவாமி வாகனங்களில் திருவீதி வலம் வந்தனர்.நேற்று தேரோட்டத்தை முன்னிட்டு அதிகாலையில் சுவாமி தேரில் எழுந்தருளினார். முதல் தேரில் திருக்கோளநாதர் -ஆத்மநாயகியும், இரண்டாம் தேரில் அம்பாளும் எழுந்தருளினர். மேலும், சண்டிகேஸ்வரரும், விநாயகரும், முருகனும் சப்பரத்தில் எழுந்தருளினர்.பின்னர் பக்தர்கள் சுவாமிக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். குன்றக்குடி பொன்னம்பல அடிகள் முன்னிலையில் காலை 9:30 மணி அளவில் தேர் வடம் பிடிக்க தேரோட்டம் துவங்கியது. இன்று காலை தீர்த்தம் வழங்குதலும்,நாளை காலை சுவாமி மலைக்கோயில் எழுந்தருளலுடன் விழா நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ