பூக்கடைகாரர் கொலை வழக்கு மேலும் ஒருவர் கைது
சிவகங்கை: சிவகங்கை பூக்கடைக்காரர் வெங்கடேஷ் 28 கொலை வழக்கில் 4 பேர் கைதான நிலையில் மேலும் ஒருவர் நேற்று கைதாகினார். சிவகங்கை அருகே மேலவாணியங்குடியில் டிச.19 இரவு 8:30 மணிக்கு பூக்கடை வியாபாரி வெட்டி கொலை செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய 4 பேரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். இந்த வழக்கில் மதுரை ஒத்தக்கடை குருசாமி மகன் சதீஷ் 37, என்பவரை நேற்று போலீசார் கைது செய்தனர்.