உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிறுபான்மையினர் உயர்கல்விக்கு கல்வி உதவி பெற விண்ணப்பம்  அக். 31 கடைசி நாள் 

சிறுபான்மையினர் உயர்கல்விக்கு கல்வி உதவி பெற விண்ணப்பம்  அக். 31 கடைசி நாள் 

சிவகங்கை: முஸ்லிம் மாணவர்கள் வெளிநாட்டில் படிக்க ரூ.36 லட்சம் கல்வி உதவி தொகை பெற அக்., 31க்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் சென்று உயர்கல்வி படிக்க முஸ்லிம் மாணவர்களுக்கு தலா ரூ.36 லட்சம் வீதம் 10 மாணவர்களுக்கு வழங்க ரூ.3.60 கோடி வரை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற மாணவ, மாணவிகள் உலகளாவிய தர வரிசையில் முதல் 250 இடங்களுக்குள் உள்ள பல்கலை கல்வி நிறுவனங்களிடம் இருந்து நிபந்தனையற்ற சேர்க்கை கடிதம் பெற்றிருக்க வேண்டும். பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். பட்டப்படிப்பில் 60 சதவீதம் அல்லது அதற்கு இணையாக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொறியியல், மேலாண்மை, பயன்பாட்டு அறிவியல், வேளாண்மை அறிவியல், மருத்துவம், சர்வதேச வணிகள், பொருளாதாரம், நிதி கணக்கியல், மனித நேய படிப்பு, சமூக அறிவியல், நுண்கலைகள் மற்றும் சட்டம் போன்ற பாடப்பிரிவுகளை தேர்வு செய்து முதுகலை பட்டம் படிக்கலாம். தகுதியுள்ள மாணவர்கள் www.bcmbcmw.tn.gov.in/welfschemes_minorities.htm என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தை ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, சேப்பாக்கம், சென்னை 600 005 என்ற விலாசத்திற்கு அக்., 31 க்குள் ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை