உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பம்

கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பம்

சிவகங்கை: எல்.ஐ.சி., பொன்விழா கல்வி உதவித் தொகை திட்டத்தில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.10, பிளஸ் 2 வகுப்பு, டிப்ளமோ அல்லது அதற்கு சமமான சிஜிபிஏ தேர்வில் தேர்ச்சி பெற்று கல்வியாண்டு 2024--25ல் டாக்டர், பொறியியல், அனைத்து பட்டப் படிப்பு, ஏதேனும் ஒரு துறையில் பட்டயப் படிப்பில் முதல் ஆண்டு சேர்க்கை பெற்றுள்ள மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படும். இதேபோல் தொழிற்கல்வி படிப்பில் சேரும் மாணவர்களுக்கும் உதவித் தொகை வழங்கப்படும்.10ஆம் வகுப்பு முடித்து பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு, 2 ஆண்டு டிப்ளமோ படிப்பில் சேரும் பெண் குழந்தைகளுக்கு சிறப்பு கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்க டிச. 22ஆம் தேதி கடைசி நாள். கூடுதல் தகவல்களை https://licindia.inஎன்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ