பாராட்டு விழா
சிவகங்கை: கீழக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சுற்றுச்சூழல் மன்றம் தேசிய பசுமை படை சார்பில் மகிழ் முற்றம் மாணவ அணி குழுக்களுக்கு பாராட்டு விழா நடந்தது. தலைமை ஆசிரியர் தெய்வானை தலைமை வகித்தார். ஆசிரியர் ஆரோக்கியசாமி முன்னிலை வகித்தார். ஆசிரியர் மீனாட்சி வரவேற்றார். விடுமுறை நாட்களில் பனை மர விதைகள் நடும் திட்டத்திற்காக 2000 விதைகளை மாணவர்கள் சேகரித்தனர். ஆசிரியர் கீதா நன்றி கூறினார்.