மேலும் செய்திகள்
ஒன்பது ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது
05-Sep-2025
மாவட்டத்தில் 10 பேருக்கு நல்லாசிரியர் விருது
05-Sep-2025
சிவகங்கை; சிவகங்கை மாவட்டத்தில் நல்லாசிரியர் விருது பெற்ற 9 பேருக்கும் மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் பாராட்டு நடந்தது. கலெக்டர் பொற்கொடி தலைமை வகித்தார். நல்லாசிரியர் விருது பெற்ற மொட்டவயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் விஜயராணி, சேம்பர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சுரேஷ், பசியாபுரம் ஊராட்சி ஒன்றி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரெஜினா ஞானசெல்வி, சிவகங்கை 48 காலனி நகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மரிய செல்வி, கண்ணங்குடி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பாக்கியம், கோவிலுார் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராமர், சாக்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் முருகேஸ்வரி, மணலுார் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் முருகேசன், காரைக்குடி மகரிஷி வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி ஆசிரியர் ரவிக்குமார் ஆகிய 9 பேரை கலெக்டர் பொற்கொடி பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பொறுப்பு மாரிமுத்து மற்றும் பள்ளிக் கல்வித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
05-Sep-2025
05-Sep-2025