உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திறனறிதல் தேர்வு ஆசிரியர் கோரிக்கை

திறனறிதல் தேர்வு ஆசிரியர் கோரிக்கை

சிவகங்கை: தமிழ் இலக்கிய திறனறி தேர்வு பணியில் ஈடுபட்ட ஆசிரியர் களுக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்க வேண்டும் என தமிழ்நாடு தமிழாசிரியர் சங்க மாநில பொது செய லாளர் இளங்கோ கோரிக்கை விடுத்து உள்ளார். அவரதுகோரிக்கை: - பள்ளிக் கல்வித்துறை சார்பில் தமிழ்மொழி இலக்கிய திறனை மாணவர்களிடம் மேம்படுத்தும் வகையில் தமிழ் மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வு ஆண்டுதோறும் பிளஸ் 1 மாணவர்களுக்கு நடத்தப் படுகிறது. நடப்பாண்டு தமிழ் இலக்கியத்திறனறித் தேர்வு தமிழகத்தில் அக்.,11ல் நடந்தது. இத்தேர்வு அறை கண் காணிப்பாளர் பணிக்கு பட்டதாரி ஆசிரியர் நியமிக்கப்பட்டனர். விடுமுறை நாளில் பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ