உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வழிப்பறி வழக்கில் கைது

வழிப்பறி வழக்கில் கைது

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் வீரப்பட்டியை சேர்ந்தவர் தினேஷ் 24. இவர் மாலத்தீவில் கட்டட தொழில் செய்து வருகிறார். இவர் தற்போது சொந்த ஊருக்கு வந்துள்ளார். பொன்னாம்பட்டியில் விறகு வெட்டும் தொழில் செய்து வரும் அவரது உறவினர் முத்து என்பவரின் உரிமையாளரிடம் விறகு அறுக்கும் மிஷினை கொடுத்து விட்டு சம்பளம் வாங்க தினேஷ், உறவினர் முத்து, நண்பர் மணிகண்டன் 3 பேரும் கருங்காளக்குடி ரோட்டில் டூவீலரில் சென்றனர். அப்போது எதிரே வந்த வீரனேரி மதியழகன் மகன் ராமன் 20, சோழபுரம் காளீஸ்வரன் மகன் அய்யப்பன் 20 உள்ளிட்ட 6 பேர் வழிமறித்து பணம் கேட்டுள்ளனர். தினேஷ் பணம் இல்லை என்று கூறியதால் தினேஷ், முத்து, மணிகண்டன் உள்ளிட்ட 3 பேரையும் அவர்கள் சோழபுரம் கண்மாய்க்குள் மிரட்டி அழைத்து சென்று தாக்கி தினேஷிடம் இருந்த ரூ.4 ஆயித்தை பறித்தனர். தினேஷ் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். போலீசார் ராமனை கைது செய்து மற்றவர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி