உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தேவகோட்டையில் அம்பு எய்தல் வைபவம்

தேவகோட்டையில் அம்பு எய்தல் வைபவம்

தேவகோட்டை: தேவகோட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் மைதானத்தில் நவராத்திரி விழாவை முன்னிட்டு சுவாமிகள் எழுந்தருளி அம்மன் அம்பு எய்தல் வைபவம் நடந்தது. இக்கோயில் எதிரே உள்ள மைதானத்தில் நவராத்திரி நிறைவடைந்த பின் ஆயுதங்களுக்கு பூஜை செய்தபின் போருக்கு சென்று வெற்றியடையும் வைபவம் நடந்தது. கோயிலிலிருந்து இரவில் மீனாட்சி, முருகப் பெருமான் தங்க குதிரையிலும், நித்திய கல்யாணி கைலாசநாதர் கோயிலிலிருந்து நித்திய கல்யாணி மைந்தன் முருகன், கோதண்டராமர் கோயிலிலிருந்து ராமர், ரங்கநாத பெருமாள் கோயிலிலிருந்து பெருமாள், கிருஷ்ணர் கோயிலிலிருந்து கிருஷ்ணர் ஆகியோர் தனித் தனியாக அலங்கரிக்கப்பட்ட குதிரையில் மகர்நோன்பு மைதானத்தில் எழுந்தருளினர். பக்தர்கள் கூடி அம்பு எய்தல் நடந்தது. அம்பு போடும் நிகழ்வுக்கு பின் சுவாமிகளுக்கு தீபாராதனை நடந்து சுவாமி பிரியா விடை பெற்று சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ