பேரவைகூட்டம்
மானாமதுரை: மானாமதுரை குலாலர் தெரு மண்பாண்ட தொழிலாளர்கள் கூட்டுறவு குடிசைத் தொழிலாளர்கள் சங்க பேரவை கூட்டம் கதர் கிராம தொழில்கள் வாரிய செயலாட்சியர் மாரியம்மாள் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் உதவி இயக்குனர் நல்லதம்பி பேசினார். எழுத்தர் நாகலிங்கம் சங்கத்தின் வரவு, செலவு அறிக்கையை வாசித்தார். கூட்டத்தில்நிர்வாகிகள், உறுப்பினர்கள், மண்பாண்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.