உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஓவிய ஆசிரியருக்கு விருது

ஓவிய ஆசிரியருக்கு விருது

காரைக்குடி : தமிழ்நாடு அரசு கலைப்பண்பாட்டு துறை சார்பில் சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில், மாநில ஓவிய கண்காட்சி நடந்தது.இதில் மூத்த கலைஞர்கள் பிரிவில் காரைக்குடி அழகப்பா மாதிரி பள்ளி ஓவிய ஆசிரியர் முத்துப்பாண்டியனின் ஓவிய படைப்பு இடம் பெற்றது. இன்றைய தலைமுறையின் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கக்கூடிய சமூக வலைதளங்கள், போதை பழக்க வழக்கங்களுக்கு ஒரே தீர்வு கல்வி மட்டுமே என்பதை அடிப்படையாகக் கொண்டு ஓவியம் வரைந்தார். இவரது படைப்பு, சிறந்த ஓவியத்திற்கான விருதை பெற்றது. செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை அமைச்சர் சாமிநாதன் சென்னை மேயர் பிரியா விருதினை வழங்கினர். ஓவியாசிரியர் முத்துப்பாண்டியை அழகப்பா பல்கலை துணைவேந்தர் ரவி, பள்ளி தலைமை ஆசிரியர் ரமேஷ் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை