மேலும் செய்திகள்
சட்டப்பணிகள் ஆணைக்குழு புதிய செயலாளர் நியமனம்
05-Oct-2026
இளையான்குடி: இளையான்குடி வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவரும்,நீதிபதியுமான மணிவர்மன் தலைமையில் கோர்ட் வளாகத்தில் மனநலம் குன்றியோருக்கான உரிமைகள் குறித்த பலகையை திறந்து வைத்து உரிமைகள், சட்ட பாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கினார். அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் பயின்று வரும் மனநலம் குன்றிய குழந்தைகளுக்கு நோட்டு,புத்தகங்களை வழங்கி அவர்களுக்கு சட்ட பாதுகாப்பு, சட்ட உதவி குறித்து பேசினார்.வக்கீல்கள் சிவக்குமார், முத்துச்சாமி, குமார், காளியம்மாள்,பாண்டியன்,மாரிமுத்து, ஹரிஹரன்,பிரபு,ரகுபதி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.சட்ட பணிகள் குழு இளவரசன் ஏற்பாடுகளை செய்திருந்தார்.
05-Oct-2026