மேலும் செய்திகள்
கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள்
18-Jun-2025
சிவகங்கை: சிவகங்கை அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் மாணவிகளுக்கு அலைபேசி பயன்படுத்தும் முறை குறித்து சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் விழிப்புணர்வு வழங்கினர். சிவகங்கை சட்டப்பணிகள் ஆணைக்குழு நீதிபதி ராதிகா தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை சிவமணி வரவேற்றார். ஒருங்கிணைந்த கல்விதிட்ட உதவி திட்ட அலுவலர் பீட்டர் லெமாயூ, சி.இ.ஓ., (பி.ஏ.,) நடேசன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் துரை, இன்ஸ்பெக்டர் லலிதா, எஸ்.ஐ., தமிழ்செல்வி, சேவை மைய பணியாளர் மனோகரி, ஆசிரியை, மாணவிகள் பங்கேற்றனர். சட்ட உதவிக்குழு சார்பில் மாணவிகளுக்கு அலைபேசியை கையாளும் விதம், தங்கள் புகைப்படங்களை தேவையின்றி அலைபேசி பேஸ்புக்கில் வெளியிடுதல், தங்கள் படங்களை வாட்ஸ் ஆப், டுவிட்டர் பக்கங்களில் வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என விழிப்புணர்வு அளித்தனர்.
18-Jun-2025