பூப்பந்தாட்ட அணி வீராங்கனை தேர்வு
காரைக்குடி: தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதுாரில் மாவட்ட அளவிலான பூப்பந்தாட்ட போட்டி நடந்தது. இதில், சிவகங்கை மாவட்ட அணி வீராங்கனை முத்தரசி விளையாடினார். இதில் வெற்றி பெற்றதன் மூலம் இவர், மாநில பூப்பந்தாட்ட அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். தேர்வு செய்யப்பட்ட மாணவியை சிவகங்கை மாவட்ட பூப்பந்தாட்ட கழகம் மற்றும் காரைக்குடி வள்ளல் அழகப்பர் பூப்பந்தாட்ட கழகத்தினர் வாழ்த்தினர்.