சிவகங்கையில் ரூ.8.59 லட்சம் விதை விற்பனை செய்ய தடை
சிவகங்கை: மாவட்ட அளவில் விதை விற்பனை நிலையங்களில் நடத்திய ஆய்வில், விதிப்படி பராமரிக்காத ரூ.8.59 லட்சம் மதிப்பிலான விதைகளை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்ட அளவில் உள்ள விதை விற்பனை நிலையங்களில் திருநெல்வேலி விதை ஆய்வு துணை இயக்குனர் சுஜாதாபாய், ராமநாதபுரம் துணை இயக்குனர் அப்ராம்சா ஆகியோர் தலைமையில் விதை ஆய்வாளர்கள் குழுவினர் ஆய்வு செய்தனர். உரிய விதிகளை பின்பற்றாத விதை விற்பனை நிலையங்களில் இருந்த ரூ.8 லட்சத்து 59 ஆயிரத்து 635 மதிப்புள்ள விதைகளை விற்பனை செய்ய தடை விதித்துள்ளனர்.